வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சென்னை நோக்கி வந்த ஒரு ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.