Categories
உலக செய்திகள்

வேண்டாம் ப்ளீஸ்… என் மூஞ்சில இத அடிக்காதீங்க… கதறிய 9 வயது சிறுமி… அமெரிக்காவில் பரபரப்பு…!

அமெரிக்காவின் 9 வயதுடைய சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் 9 வயதுடைய ஆப்பிரிக்க அமெரிக்க சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தாயையும் கொலை செய்யப் போவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டிருந்த அச்சிறுமியை தடுத்து நிறுத்தினார். மேலும் அச்சிறுமியின் கைகளில் விளங்கை போட்டு வண்டியில் ஏற்ற முயற்சித்தார்.

ஆனால் அச்சிறுமி மிகவும் கூச்ச லிட்டு வண்டியில் நான் வரமாட்டேன் என்று கத்தினார். அதன்பின் போலீசார் பெப்பர் ஸ்ப்ரேவை சிறுமியின் முகத்தில் அடித்துள்ளார். அப்போது சிறுமி, என் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரேவை அடிக்காதீங்க ப்ளீஸ் வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.இந்த சம்பவத்தின் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதை தொடர்ந்து சிறுமியின் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்த போலீசாருக்கு எதிராக கடும் கண்டனங்களும், போராட்டங்களும் எழுந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் கூறுகையில், அச்சிறுமியின் தற்கொலையை தடுப்பதற்காகவே தான் இப்படி செய்தேன் என்று கூறினார். ரோசெஸ்டர் மேயர் வவ்லி வாரன் குழந்தைக்கு எதிராக பெப்பர் ஸ்ப்ரேவை பயன்படுத்திய போலீசாரை கடுமையாக கண்டித்துள்ளார்.

Categories

Tech |