Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் Poco M3 ஸ்மார்ட்போன் அறிமுகம்…!!!

போக்கோ நிறுவனம் தனது புதிய m3 ஸ்மார்ட்போன் மாடலை பிப்ரவரி 9ஆம் தேதி முதல் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் நாளுக்கு நாள் புதிய அப்டேட்களை பெறும் பிராண்ட் மொபைல்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு செல்போன் நிறுவனங்களும் புதிய மொபைல்களை வெளியிட்டு வருகின்றன.

அதன்படி போக்கோ நிறுவனம் தனது புதிய m3 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலில், 6 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 662 சிப்செட், 48 மெகாபிக்சல் உடன் கூடிய கேமரா, HD தொடுதிரை, 6000mAh பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் முதல் விற்பனை பிப்ரவரி 9ஆம் தேதி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது.

Categories

Tech |