நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ பட டீஸரை வெளியிடும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘மாநாடு’ . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் இந்த படத்தை காமாட்சி தயாரிக்கிறார் . இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே .சூர்யா ,இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ,டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, மனோஜ், உதயா, அரவிந்த் ஆகாஷ் ,படவா கோபி, ஒய்.ஜி .மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் .இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
The Wait is Over !!
Maanadu Teaser will be revealed by the Legendary Director/Actor/Producer @anuragkashyap72 @2:34PM Tomorrow.
Thank you so much Sir for doing this for us ✊🏻#Maanadu #STR #SilambarasanTR #MaanaduTeaser #AvpPolitics pic.twitter.com/InnJkt8dAN— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021
பொங்கல் தினத்தில் ‘மாநாடு’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு சிம்புவின் பிறந்தநாளில் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி மாநாடு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்திருந்தது . இந்நிலையில் நாளை மதியம் 2 : 34 மணிக்கு பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப், கன்னட நடிகர் சுதீப், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் மாநாடு படத்தின் டீஸரை வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.