சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அதன் உரிமையாளரான சிவராஜ் என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 16 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.