Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஓடும் பேருந்தில்… அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார்…!!

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி சிற்றம்பலத்தில் நடைபெற்றதால் அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வள்ளி முடிவெடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 9 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அதன்பின் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதிக்கு கம்பூர் பகுதியிலிருந்து செல்லும் பேருந்தில் ஏறி விட்டார்.

அப்போது பேருந்தில் அதிகளவு பயணிகள் இருந்ததால், அதனை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் வள்ளி பையில் வைத்திருந்த 9 பவுன் நகையை அவருக்கே தெரியாமல் திருடி விட்டு தப்பியோடிவிட்டனர். இதனையடுத்து சிற்றம்பலம் கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் வள்ளி தனது பையை திறந்து பார்த்து உள்ளார். அப்போது அதிலிருந்த 9 பவுன் நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகையைத் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |