நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பூமி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது . தற்போது இவர் இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது . இதனிடையே நடிகர் ஜெயம் ரவி ‘பூலோகம்’ பட இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவி கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . பூலோகம் படத்தில் பாக்ஸராக நடித்திருந்த ஜெயம் ரவி இந்தப் படத்தில் வடசென்னையை சேர்ந்த கேங்ஸ்டராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.