Categories
தேசிய செய்திகள்

வீடியோ: முதியவரின் அழுகிய சடலம்…. அருகில் வர தயங்கிய மக்கள்…. தானே சுமந்து சென்ற பெண் காவலர்…!!

பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் இறந்தவரின் சடலத்தை தானே சுமந்து சேர்த்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாய நிலத்தில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரா சிரிசா முதியவரின் உடலை பார்வையிட்டுள்ளார். இதையடுத்து அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீசியதால் அதன் அருகே யாரும் விரும்பாமல் இருந்துள்ளனர். மேலும் இறந்து கிடந்த முதியவரை குறித்து உதவி ஆய்வாளர் விசாரித்துள்ளார். அவர் ஒரு யாசகர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து பெண் ஆய்வாளர் முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய சிரிஷா லலிதா சேரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு அழைத்து பேசியுள்ளார். இதையடுத்து முதியவரின் பிணம் இருந்த இடத்திற்கும் காவல்துறை வாகனத்திற்கும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் என்பதால் அவருடைய சடலத்தை எடுத்துச் செல்ல கிராம மக்களின் உதவியை கோரியுள்ளார். ஆனால் யாரும் உதவிக்கு வராத நிலையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு சடலத்தை தூக்கி சுமந்து சென்றுள்ளார் காவல் ஆய்வாளர் சிரிஷா.

இறுதி மரியாதை செய்வதற்காக தன்னுடைய சொந்த பணத்திலிருந்து சிறு தொகையையும் அளித்து உதவி செய்திருக்கிறார் இந்த காவல் ஆய்வாளர். இந்நிலையில் உதவி ஆய்வாளரின் இந்த செயல் ஆந்திராவில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் என்னுடைய கடமையை செய்தேன். இதில் பெரிதாக குறிப்பிட என்ன இருக்கிறது. ஆனால் இது தொடர்பாக உயர் அதிகாரிகள் எனது பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |