Categories
தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் “தனித்து போட்டியிடுவோம்”- மாயாவதி..!!

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து  மக்களவை தேர்தலை எதிர் கொண்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. மீதமுள்ள 62 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றியது. இதை தொடர்ந்து தேர்தலுக்கு பின் இரு கட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வந்தனர்.

Image result for அகிலேஷ் யாதவ் மாயாவதி

இந்த நிலையில்,  உ.பி.யில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி முறிந்த நிலையில், இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின்னர் சமாஜ்வாதி கட்சியின் செயல்பாடுகளே தனித்து போட்டியிடுவதற்கு காரணம் என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |