நபர் ஒருவர் திருட்டு செயலில் ஈடுபட்டு விட்டு பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் காண்போரை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது.
நபர் ஒருவர் தனக்கு முன்னால் நிற்பவரிடம் திருட்டு செயலில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தனக்கு எதிரே ஒருவர் கேமரா எடுப்பதை பார்த்து அவர் செய்த நடவடிக்கை காண்பவர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 20 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவில் நபர் ஒருவர் நெரிசலான கடை ஒன்றில் மக்கள் பொருட்களை வாங்குவதற்காக வரிசை நிற்கும் போது பின்னால் நின்று தனக்கு முன்னால் உள்ள ஒரு பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்து விடுகிறார்.
பின்னர் சுற்றுமுற்றும் பார்க்கும்போது இதை ஒருவர் வீடியோவாக எடுப்பதைக் கண்டு மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் அந்த பர்ஸை உரிமையாளரிடம் கொடுத்து விடுகின்றார். இந்த வீடியோ பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்ததால் மும்பை காவல்துறையினர் தங்களுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையில் அதனுடைய விளைவுகள் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.
https://twitter.com/i/status/1031411487900880896