கவர்ச்சி புகைப்படம் கேட்ட ரசிகர்களை நடிகை லட்சுமி மேனன் கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார் .
தமிழ் திரையுலகில் நடிகை லட்சுமி மேனன் கும்கி ,சுந்தரபாண்டியன் ,மஞ்சப்பை, ஜிகர்தண்டா ,பாண்டியநாடு ,வேதாளம், கொம்பன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . தற்போது இவர் படங்களில் நடிப்பதை குறைத்து படிப்பு மற்றும் நடனத்தில் கவனம் செலுத்தி வருகிறார் . மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் . சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவலுக்கு ‘மற்றவர்கள் பயன்படுத்திய கழிவறையை கழுவ முடியாது. நான் அங்கு செல்ல மாட்டேன்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து லட்சுமி மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் ‘யாரையாவது திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகுங்கள்’ என்று கூறியதற்கு பதிலடி கொடுத்தார் . இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் லட்சுமி மேனனிடம் சில ரசிகர்கள் கவர்ச்சி புகைப்படங்கள் கேட்டுள்ளனர் . இதைப் பார்த்த லட்சுமி மேனன் அவர்களை கெட்டவார்த்தையால் திட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .