அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் சொந்த வீடு கட்டவோ, வாங்கவோ அரசு சார்பில் முன் பணம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் சொந்த வீடு வாங்கும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதற்காக ஒரு குறிப்பிட்ட நீதி அரசு சார்பில் ஒதுக்கப்படும். இந்த திட்டத்தின் முன்பணமாக 25 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் முன்பணம் 40 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வீடு கட்டுவதற்கான முன்பணத்தை 25 லட்சத்தில் இருந்து 40 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.