நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’ . கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த வருடம் மே மாதம் ரிலீசாக இருந்தது . ஆனால் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது . இதையடுத்து ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல்கள் வெளியானது . தயாரிப்பு தரப்பின் இந்த முடிவால் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது இந்த திரைப்படம் ஒரே நாளில் தியேட்டரிலும் ஓடிடியிலும் ரிலீஸாகும் என தகவல் பரவி வருகிறது . இந்நிலையில் நடிகர் தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸ் குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் எல்லாரையும் போல நானும் ஜகமே தந்திரம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என நம்புகிறேன் ‘ என்று பதிவிட்டுள்ளார் . இதனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.