எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட பொதுப்பணித்துறை தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27ஆம் தேதி அன்று விடுதலை ஆனார். இதையடுத்து முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் நலம் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி பெங்களூரு பண்ணை வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதையடுத்து விரைவில் தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்தில் திறக்கப்பட்ட து.
இதையடுத்து எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களை பொதுமக்கள் பார்வையிட தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பொதுப்பணித்துறை தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் சென்னை வரும் சசிகலா ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். இதனை தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.