விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதை விட்டு விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் இரும்பு ஆணிகளை அடித்திருப்பது சாலை தடுப்புகளை அமைத்து உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவோடு விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க எண்ணாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சுவரை எழுப்பாமல் பாளத்தை கட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.