Categories
சினிமா தமிழ் சினிமா

நாளைக்கு மதியம் 2.34-க்கு ரெடியா இருங்க…. அறிவிப்பு…!!

சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு நாளை மதியம் 2.34 மாநாடு படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த கதை அரசியலை மைய படுத்தி அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வந்தது. சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு நாளை மதியம் இரண்டு 2. 34 மணிக்கு பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யப், மலையாள நடிகர் பிருத்விராஜ், கன்னட நடிகர் சுதீப் ஆகியோர் முன்னிலையில் இப்படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |