சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை கவரும் வகையில் மத்திய பட்ஜெட் கருவியாக பயன்படுத்த பட்டுள்ளதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2021- 2022ஆண்டிற்கு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இதில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சிவசேனா விமர்சித்துள்ளது.
பட்ஜெட் குறித்து சிவசேனாவின் அதிகாரபூர்வமான நாளையேடான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர பட்ஜெட்டில் கருவியாக மத்திய அரசு பயன்படுத்துவது சரியா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தேர்தல் அல்லாத மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை எனறும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.