தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி திருவொற்றியூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “திமுகவை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தவே அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார். அதிமுக மிகப்பெரிய இயக்கம். அதனை யாராலும் வீழ்த்த முடியாது” என்று சூளுரைத்துள்ளார். மேலும் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளோம் என்று கூறியுள்ளார்.