Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அதை ஏன் எடுக்கல… அலட்சியத்தால் வந்த வினை… பறிபோன புதுமாப்பிள்ளையின் உயிர்… தென்காசியில் பரபரப்பு…!!

அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள தென்மலை கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பெயிண்டிங் பணிக்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர்.

இவர்களது மோட்டார் சைக்கிள் தென்மலை சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, மாடசாமி சாலையின் நடுவே இருந்த கல்லை கவனிக்காமல் கல் மீது மோட்டார் சைக்கிளை கொண்டு மோதி விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் மாடசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் படுகாயத்துடன் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நடைபெற்ற சாலையில் உளுந்தை காயப்போட்டு இரவு நேரத்தில் அதனை எடுக்காமல் அதன் மீது தார் போட்டு விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இவர்கள் மாலை வேளையில் இந்த கல்லை எடுத்திருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியான மாடசாமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இவ்வாறு அவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இவரது தந்தையும் இதே போன்று ஒரு விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |