Categories
Uncategorized

பிக்பாஸ் பிரபலத்தின் தந்தை திடீர் மரணம்… “இதுவும் கடந்து போகும்”… உருக்கமான பதிவு…!!!

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார்.

விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். அதன் 4வது சீசன் கடந்த வாரம் நடந்து முடிந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தை இன்று திடீரென உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த ரசிகர்கள் பாலாஜிக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

இதுபற்றி பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இதுவும் கடந்து போகும்”என குறிப்பிட்டுள்ளார். பாலாஜியின் தந்தை மறைவிற்கு சக பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். பாலாஜியின் அம்மா சில வருடங்களுக்கு முன்னரே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |