Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கள்ளக்காதல் விவகாரம்” ஆசிரியரை கொன்ற…. சக ஆசிரியரின் கணவர்…!!

ஆசிரியர் ஒருவரை சக ஆசிரியரின் கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் வசிப்பவர் சிவகுமார். ஆசிரியரான இவருக்கு விக்டோரியா என்ற ஒரு மனைவி, மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவகுமார் பள்ளிக்கு சென்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இதையடுத்து அதே நாளில் அந்த பகுதியில் உள்ள வனப்பகுதியில் தலை நசுக்கப்பட்ட நிலையில் சிவகுமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதாவது இறந்து கிடந்த நபர் சிவக்குமார் என்பது அவருடைய பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குற்றவாளியை கண்டு பிடிக்க 3 தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இது குறித்த விசாரணையில் சிவகுமார் அவருடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இது குறித்து ஆசிரியரின் கணவன் இளங்கோவிற்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து இளங்கோ சிவகுமாரை பலமுறை எச்சரித்தும் கேட்காததால் ஆத்திரமடைந்த இளங்கோ கூலிப்படை மூலம் சிவக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் இளங்கோ மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |