மும்பையில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் குர்கான் பகுதி பக்கத்தில் அமைந்துள்ள இன் ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த விசாரணையில் ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் தீ பிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளம் என்பது குறிப்பிடத்தக்கது.