Categories
உலக செய்திகள்

சலூன் கடையை ஸ்டூடியோவாக மாறியது எப்படி?..கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பெண்ணின் புத்தி கூர்மை…!

கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த பெண் ஒருவர் தனது தொழிலை மாற்றி அமைத்து வருமானம் சம்பாதித்து வருகிறார்.

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். கனடாவில் இருக்கும் பெண் ஒருவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட போது தனக்கு புத்தி கூர்மையால் யோசித்து அதனை சமாளித்து வருமான ஈட்டியுள்ளார். கனடா ஒன்டாரியோ பகுதியை சேர்ந்தவர் அலிக்கா ஹிட்லர்.

இவர் அப்பகுதியில் குரோம் ஆர்டிஸ்ட் பார்மர் என்ற சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். கொரோனா காலம் நிலவியதும் அப்பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நீண்ட நாட்களாக ஊரடங்கு போடப்பட்டதால் அலிகாவின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப் பட்டது. இருப்பினும் சலூன் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது.

அதனால் அலிகார் தனது புத்திக்கூர்மையை உபயோகித்து மாற்று வழியில் யோசித்தார். அது என்னவென்றால், ஸ்டூடியோகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை அவர் கவனித்தார். அதேபோல தனது சலூன் கடையும் ஸ்டூடியோ போல மாற்றினார். அந்த ஸ்டூடியோவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், திரை படங்களுக்காகவும் ஆடிஷன் மேற்கொள்ள வாடகைக்கு விட்டு சம்பாதித்தார்.

ஆகையால் அலிக்காவின் வாழ்வாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பியது. இதுகுறித்து அலிக்கா  ஹிட்லர் கூறியதாவது,கொரோனா எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. சலூன் கடையில் வரும் வருமானத்தை நம்பியே எங்களது குடும்பம் இருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் சலூன் கடைகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தது. ஆகையால் நான் மாற்று வழியை யோசித்தேன். அதனால்தான் நான் சலூன் கடையை ஸ்டூடியோ வாக ஏமாற்றி அதன் மூலம் வருமானம் பெற்று வருகிறேன்.

கனடா அரசுக்கு சிறு குறு தொழிலாளர்கள் மீது சரியான அணுகுமுறை இல்லை.வால்மார்ட் போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கும் அரசு சின்ன சின்ன சலூன் கடை வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் எங்களைப் போன்றவர்களின் நிலைமையை எண்ணிப் பார்க்காமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, என்னைப் போன்ற சாமானிய மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனக்கூரி கனடா அரசை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |