Categories
இந்திய சினிமா சினிமா

முட்டாளே… “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, தீவிரவாதிகள்”… பிரபல பாடகி திட்டிய கங்கனா..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா அவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக திட்டியுள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது பற்றி ஏன் நாம் பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானா கங்கனா திட்டியுள்ளார்.

டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல அவர்கள் இந்தியாவின் பிளவுபடுத்த முயற்சிக்கும் பயங்கரவாதிகள்.இதனால் பாதிக்கப்பட கூறியது நான்தான். அமெரிக்காவைப் போல நம் தேசத்தையும் கையகப்படுத்தி சீன காலனியாக மாற்ற முடியும். முட்டாள். நாங்கள் உங்களைப் போல எங்கள் தேசத்தை விற்கவில்லை என கங்கனா ரணவத் தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த பதிவு கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. போராடும் விவசாயிகளுக்கு எதிராக இவ்வளவு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திய கங்கனா ரனாவத்திற்கு  சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |