பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் இன் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழைச் சுவாசித்தவர், தமிழை நேசித்தவர் தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.