ஆன்லைனில் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்வது போல், இந்த ஆண்டு முதல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
கடந்த மாதம் வெளியான வாக்காளர் இறுதிப் பட்டியலில் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள எண் அல்லது படிவம் 6 எண்ணை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முதல் கட்டமாக 28-ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் எனவும், அடுத்த கட்டமாக அனைத்து வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் இதனை மொபைல் போனில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம். வாக்காளர் அட்டை தொலைந்தவர்கள் இதுவரை வாங்காத வாக்காளரும், சேவையை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.