நாடு முழுவதிலும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என்ற அதிர்ச்சி தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக அதிகபட்சமாக அருணாச்சல பிரதேசத்தில் 14 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை.அடுத்ததாக மணிப்பூர் மாநிலத்தில் 12 மாவட்டங்களில் ரத்த வங்கிகள் இல்லை. நாகலாந்தில் 9 மாவட்டங்களிலும் மேகாலயாவில் ஏழு மாவட்டங்களிலும், அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் தலா 5 மாவட்டங்களில் ஒரு ரத்த-வங்கி கூட இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், “பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. எனவே தேவைக்கேற்ப ரத்த-வங்கிகளை இருப்பதை உறுதிசெய்வது மாநில அரசுகளின் முதன்மை பொறுப்பு. ஆனாலும் மாநில அரசுகள் கோரிக்கைகள் பிடிக்கும் பட்சத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உதவிகள் செய்யப்படும். இதுவரை ரத்த வங்கிகளில் ரத்தம் கிடைக்கவில்லை என்ற புகார் வந்தது இல்லை. தன்னார்வ அமைப்புகள் மூலம் 24 மணி நேரமும் ரத்தம் கிடைப்பது உறுதி செய்வோம்”என்று அவர் கூறியுள்ளார்.ரத்த வங்கிகள் இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் உட்பட எந்த ஒரு தென் மாநிலங்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.