Categories
உலக செய்திகள்

அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறேன்..ஜெஃப் பெசோஸ் திடீர் முடிவு…!

அமேசானின் தலைமை செயல் அலுவலர் பதவிலியிருந்து விலகுவதாக ஜெஃப் பேசோஸ் அறிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் உச்சபட்ச விற்பனையில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்துள்ளது. நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளியிட்ட பின் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெஃப் பெசோஸ் இதனை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஜெஃப் பெசோஸ் தலைமை செயலர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அமேசானின் இந்த முன்னேற்றத்திற்கு புதுமையான சிந்தனை நோக்கி பயணித்ததே காரணம். மேலும் அதற்கு இதுவே சரியான நேரம். எனவே எனது இந்த முடிவை நான் அறிவிக்கிறேன் என்று தெரிவித்தார்.ஜெஃப் பெசோஸ் அடுத்து அமேசான் நிறுவனத்தின் புதிய செயல் அலுவலராக ஆன்டி ஜாஸ்ஸி பொறுப்பேற்க உள்ளார். அமேசான் நிறுவனத்தின் நிர்வாக தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |