Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

அமைதிப் பேரணி மேற்கொண்ட திமுக… அண்ணா நினைவிடத்திற்கு முக ஸ்டாலின் அஞ்சலி…!

பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

தமிழ்நாட்டில் முன்னால் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 52வது தின நினைவு நாளையொட்டி திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோரும், திமுகவை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரறிஞர் அண்ணா நினைவு நாள்: ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி | | Patrikai  - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu,  India & World - politics, cinema, cricket, video ...

இப்பேரணி வாலாஜா சாலையில் இருந்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. அதன்பின் அறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் முகஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும்  ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Categories

Tech |