Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கி வைத்த OPS….! முடிக்க போகும் சசிகலா….. அதே நாளில் அதிரடி… அதிமுகவில் பெரும் பரபரப்பு ….!!

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. எக்கு கோட்டையாக ஜெயலலிதா காத்துவந்த அஇஅதிமுக தற்போது பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக வின் முதலமைச்சராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். சிறிது காலம் கழித்த நிலையில் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக விளங்கிய சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டு, முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டபோது சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கான தண்டனை வழங்கப்பட்டது.

இதனிடையே முதல்வராக இருந்த ஓ பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா  செய்ததையடுத்து சசிகலா முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் பிப்ரவரி 7ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து அதிமுக ஒரே குடும்பத்தின் கைகளுக்குள் செல்ல கூடாது. அதிமுகவை மீட்டெடுக்க போவதாக சூளுரைத்தார்.

தர்மயுத்தம் நடத்துகிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனிடையே சசிகலா சிறை தண்டனை அனுபவிக்க பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்ல இருந்ததால் முதல்வராக எடப்பாடி பழனிசாமியை சசிகலா தேர்வு செய்தார். சசிகலா இந்த இடைப்பட்ட காலங்களில் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் அதிமுகவில் பல மாறுதல்கள் ஏற்பட்டன.

ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்றாக இணைந்து சசிகலா, தினகரன் உள்ளிட்ட அவர் குடும்பம் சார்ந்தவர்கள் அதிமுகவில் ஒதுக்கி வைக்கப்பட்டன. பொதுச் செயலாளர் பதவி நீக்கம் செய்யபட்டு ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக தலைமை முதல்வர், துணை முதல்வர் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

இந்த நிலையில்தான் சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா  சிறையிலிருந்து விடுதலையாகி உள்ளார். தற்போது பெங்களூருவில் ஓய்வு பெற்று வரும் அவர் வருகின்ற 7ஆம் தேதி தமிழகம் வர இருக்கின்றார். தமிழகம் வர அவர் தேர்வு செய்த அதே ஏழாம் தேதி தான் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தம் நடத்தினார். அதே தினத்தில் சசிகலா  சென்னைக்கு வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக தமிழகம் வரும் அவர் ஜெயலலிதா நினைவிடம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக மூடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த நிலையில் சசிகலா தற்போது பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் நடத்திய அதே நாள் சென்னை வர இருப்பது… அவர் சிறைக்கு செல்லும் போது ஜெயலலிதா சமாதியில் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றுவாரா என்ற  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |