Categories
மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனைகளுக்கும்…. வரப்போகுது கொரோனா தடுப்பூசி….!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 195 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இங்கு முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள் , போலீஸ், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளருக்கு மட்டுமே இலவசம். கடந்த ஜனவரி 16 ஆம் தேதி இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கப்பட்டது. ஒரு நபருக்கு 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மொத்தம் 6,866 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட 195 மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கிட அனுமதி அளித்துள்ளது. அவர்களுக்கு மட்டும் இங்கு இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். அவசர சிகிச்சை எடுப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |