சிலிண்டருக்கு 196 ரூபாய் உயர்ந்துள்ளதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
இந்த மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 1,463 விற்கப்பட்ட சிலிண்டரின் விலை, இந்த மாதம் 1, 654 விற்கப்படுகிறது. இது ஒரு சிலிண்டருக்கு ரூ.191 உயர்வாகும்.