தமிழகத்தில் மிக விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை தமிழகத்தில் முற்றிலும் முடக்கப்பட்டது.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் சில ரயில் சேவைகள் இன்னும் முழுமையாக இயக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விரைவில் பயணிகள் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ரயில்வே துறையில் உள்ள ஆட்கள் பற்றாக்குறை ரயில்வே தேர்வு மூலம் விரைவில் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளது.