ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில் பேரரசர் ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று உண்மைகள் சிலவற்றை நான் கூறியதாகவும் ராஜா ராஜா சோழன் ஆட்சிக் காலம் ஒடுக்கப்பட்ட மக்களின் கற்காலம் என்று சமூக சீர்திருத்தவாதிகள் பலர் தெரிவித்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் பா.ரஞ்சித் தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் 5_ஆம் தேதி ரஞ்சித் பேசியதற்காக எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் எழாத நிலையில் காவல்துறை 11_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்துள்ளது என்று தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இனிமேல் இது போன்று பேசக்கூடாது என்று எச்சரித்து இயக்குனர் ரஞ்சித்துக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.