Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?… ஓபிஎஸ் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் ஊர் ஊராக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதிகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னையில் மொழிபெயர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதில் அதிமுகவின் சாதனைகள் குறித்து பேசிய அவர், கிராம சபை கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் தான் நடத்த வேண்டும். ஆனால் ஸ்டாலின் ஊர் ஊராக கிராம சபை கூட்டம் நடத்துகிறார். கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |