இலங்கையில் வேலை கிடைத்த சந்தோஷத்தை நண்பர்களுடன் கொண்டாட நினைத்த இளைஞர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு புதிதாக வேலை கிடைத்ததால் தனது நண்பர்களுக்கு ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தானது நேற்று முந்தினம், இலங்கை களனி கங்கையி உள்ள ஒரு பாலத்திற்கு அருகில் நடைபெற்றது. அப்போது 2 இளைஞர்கள் மட்டும் குளிக்கச் சென்றனர். மீதி இரண்டு இளைஞர்கள் களனி கங்கைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்தன.
குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போகினர். அதன்பின் போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்கு பின் இளைஞர்களின் உடல் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. நண்பர்களுடன் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.