Categories
உலக செய்திகள்

ஆரம்ப நாட்களில் தடுமாற்றம்…. தற்போது தூள் கிளப்பி புதிய மைல் கல்லை எட்டி சாதனை…!

அமெரிக்கா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை காட்டிலும் அதிக பேருக்கு தடுப்பூசி போட்டு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

உலகத்திலேயே அமெரிக்கா தான் கொரோனாவால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் 27,027,430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 457,868 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு வாரங்களாக நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அமெரிக்கா ஆரம்பகட்ட நாட்களில் தடுமாறினாலும் சமீபத்தில் தடுப்பூசி போடுவதில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 1.3மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 26.5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |