கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில் இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு அருகாமையில் தோண்டிய பொழுது மேலும் ஒரு நீளமான சுவர் கிடைத்தது.
இதை தொடர்ந்து ஆய்வாளர்கள் இது பற்றி கூறுகையில் இந்த இரண்டு சுவர்களும் நல்ல நீளமும் உயரமும் கொண்டதால் முந்தைய காலத்தில் இது ஒரு வீடாகவோ அல்லது தொழிற்ச்சாலையாகவோ இருக்கலாம் என கருத்து தெரிவித்தனர். அதனால் இந்த 5 ம் கட்ட ஆய்வில் இரட்டை சுவர் கிட்டியது தமிழர்களுக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது.மேலும் ஏற்கனவே நடைபெற்ற நான்காம் கட்ட ஆய்வு முடிவில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ஆதாரம் கிட்டியது குறிப்பிடத்தக்கது.