‘மருது’ படத்தில் இணைந்து பணியாற்றிய முத்தையா – விஷால் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முத்தையா குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், மருது, தேவராட்டம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘புலிக்குத்தி பாண்டி திரைப்படம் டி.ஆர்.பியில் விஜய் ,அஜித், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களை பின்னுக்குத்தள்ளி சாதனை படைத்தது .
இந்நிலையில் இயக்குனர் முத்தையா அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இதுவும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என கூறப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏற்கனவே முத்தையா- விஷால் கூட்டணியில் ‘மருது’ திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது .