Categories
தேசிய செய்திகள்

பெட்ரோலுக்கு காசு கொடு….. மகளை தொலைத்த தாயிடம்….. பேரம் பேசிய போலீஸ்….!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மகளை கண்டுபிடித்து தர புகார் அளிக்க வந்த மாற்றுத்திறனாளி பெண்ணிடம் போலீஸ் 15,000 வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் சரகத்திற்கு உட்பட்ட சனிகாவன் காவல் நிலையத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது 15 வயது மகள் உறவினர்களால் கடத்தப்பட்டதாக கடந்த ஒரு மாதத்திற்கு முன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த காவல் நிலைய எஸ்ஐ ராஜ்பால் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு புகார் கொடுத்த மாற்றுத்திறனாளி பெண்ணையே கீழ்த்தரமாக நடத்தி உள்ளார்.போலீஸ் வாகனத்தின் பெட்ரோல் செலவுக்கு பணம் தந்தால், கடத்தப்பட்ட மகளை தேடித் தருவதாக எஸ்ஐ கூறி உள்ளார்.

இதனால் வேறு வழியின்றி, உறவினர்களிடம் கடன் வாங்கி 15000 வரை அந்த பெண் கொடுத்துள்ளார். ஆனாலும், எஸ்ஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பெண் பணமில்லாமல் போகும் போதெல்லாம் வெளியே போ என விரட்டியிருக்கிறார். இதனால் வெறுத்துப் போன அப்பெண் டிஐஜி பிரீதிந்தர் சிங்கிடம் நேரில் புகாரளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து எஸ்ஐ ராஜ்பால் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |