கோவைக்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்:
கோவைக்காய் – 200 கிராம்
தேங்காய் துருவல் – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பற்கள்
பச்சைமிளகாய் – 3
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிய அளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் வெங்காயம், கோவைக்காய்களை எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
மேலும் அகலமான கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய கோவைக்காயை போட்டு வேகும் வரை நன்கு வதக்கியபின், நறுக்கி வைத்த வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய்யை சேர்த்து கரண்டியால் நன்கு கலந்து கிளறி விட்டு வெந்தபின் இறக்கி வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், புளியை போட்டு நன்கு வதக்கியபின் இறக்கி வைத்து ஆற வைக்கவும்.
மேலும் மிக்ஸிஜாரில் வதக்கிய கோவைக்காய் கலவையையும், துருவி வைத்த தேங்காயையும், வதக்கிய கடலைபருப்பு கலவையையும், ருசிக்கேற்ப உப்பை போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மையாக அரைத்து எடுத்து தோசையுடன் பரிமாறினால் அருமையான ருசியில் கோவைக்காய் துவையல் ரெடி.