Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈவினிங் ஸ்பெஷலாக… தயிரில் ருசியான சாலட் செய்து… குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்க..!!

பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் செய்ய தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு – 2 கப்
தயிர்                                       – 2 கப்
ஆலிவ் ஆயில்                  – 2 ஸ்பூன்
மிளகுத்தூள்                       – 1 ஸ்பூன்
உப்பு                                       – தேவையான அளவு
லெமன் ஜீஸ்                     – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்               – 1 ஸ்பூன்
வெங்காயத்தாள்             – சிறிதளவு
கொத்தமல்லி இலை    – சிறிதளவு

செய்முறை:

முதலில் பேபி உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், வெங்காயத்தூள், கொத்தமல்லி இலையை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

பின்பு அடுப்பில் பாத்திரத்தில் வைத்து, அதில் நறுக்கிய பேபி உருளைக்கிழங்கு, சிறிது உப்பு தூவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்து கொள்ளவும்.

மேலும் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் வேக வைத்த பேபி உருளைக்கிழங்கு, தயிர்,  ஆலிவ் ஆயில்,மிளகுத்தூள், லெமன் ஜீஸ்,பச்சை மிளகாயை போட்டு  நன்கு கலந்து எடுத்து அப்படியே அரை மணி நேரம் ஃபிரீஸரில் அப்படியே உற வைக்கவும்.

இறுதியில் பிரீஸரில் கலந்து வைத்த கலவையை எடுத்து,  பரிமாற செல்லும் போது, அதன் மேல் நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி தழை தூவி பரிமாறினால், ருசியான பேபி உருளைக்கிழங்கு தயிர் சாலட் தயார்.

Categories

Tech |