ஏர்டெல் வாடிக்கையாளர்களின் அந்தரங்க விபரங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் ஆதார் எண், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட அந்தரங்க விபரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்தியா முழுவதும் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்களின் அந்தரங்க விபரங்கள் ஹேக்கர்களிடம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு ஏர்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. திடீரென இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.