தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கு வீட்டு கடன் மற்றும் முன்பணம் பெரும் வரம்பு உயர்த்தி தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக வீட்டுவசதித் துறை செயலாளர் கார்த்திகேயன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக அரசின் கீழ் பணியாற்றி வரும் அகில இந்திய சேவை பிறகு அதிகாரிகளான ஐஐஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் மாநில அரசு அலுவலர்கள் அனைவருக்கும் வீட்டுமனை வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு மற்றும் கட்டிய வீட்டை வாங்குவதற்கு கடன் அல்லது முன் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக சொந்த வீடு வாங்கும் அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்புடைய மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கட்டாயம் பெறவேண்டும்.
அதன் பிறகு தமிழக அரசின் வீட்டுவசதி துறை உங்களுக்கான நிதியை வழங்கும். கடந்த 2012 ஆம் ஆண்டு வீட்டுக்கடன் முன்பணம் மாற்றி அமைக்கப்பட்டது. இதனையடுத்து அகில இந்திய சேவை பிரிவு அதிகாரிகளுக்கு அதிகபட்ச தொகையாக 40 லட்ச ரூபாயும், தமிழக அரசு அலுவலர்களுக்கு அதிகபட்ச தொகையாக 25 லட்ச ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு மத்தியில் கட்டுமானத்திற்கான செலவு அதிகரித்துள்ளது.
அதனை கருத்தில் கொண்டு அதிகபட்ச முன் பணத்தொகை மீண்டும் நிர்ணயம் செய்ய மாநில அரசு முடிவு செய்தது. அது பற்றி ஆலோசனை நடத்தி அதில் அகில இந்திய சேவைப் பிரிவு அதிகாரிகளுக்கு 40 லட்சத்தில் இருந்து 60 லட்ச ரூபாயாக முன்பணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப்போலவே தமிழக அரசு அலுவலர்களுக்கு 25 லட்ச ரூபாயிலிருந்து 40 உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.