Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ரூ.55 கோடியா?… விஜய் சேதுபதியின் அடுத்த பட சம்பளம்… வெளியான மாஸ் தகவல்…!!!

பாலிவுட் வெப் தொடரில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதியின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஏராளமான ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதி கைவசம் ஏராளமான திரைப்படங்களை வைத்துள்ளார் .

Go do some other work': Vijay Sethupathi shuts down 'Christian conversion'  trolls in epic reply | The News Minute

இதனிடையே  நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது . இந்நிலையில்  அந்த தொடரில் நாயகனாக நடிக்கும் ஷாகித் கபூரின் சம்பளத்தைவிட விஜய் சேதுபதியின் சம்பளம் அதிகம் என்ற தகவல் வெளிவந்துள்ளது . நடிகர் ஷாகித் கபூருக்கு ரூ. 40 கோடி சம்பளம் என்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ரூ. 55 கோடி சம்பளம் என்றும் வெளியான தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |