மும்பை மாநகராட்சி ஆணையர் ஒருவர் தண்ணீர் என்று நினைத்து சானிடைசரை குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், சனிடைசர் பண்படுத்துதல், முக கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பயன்படுத்த அறிவுறுத்தபட்டு வருகின்றனர். இதையடுத்து மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களில் ஒன்றாகவேஇவைகள் மாறிவிட்டன. இந்நிலையில் தற்போது சானிடைசரை குடிக்கும் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக 12 குழந்தைகளுக்கு சானிடைசரை மகாராஷ்டிராவில் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் சர்ச்சையையும் கிளப்பியது.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் தண்ணீர் என்று நினைத்து தவறுதலாக அதிகாரி சானிடைசர் குடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீர் என்று நினைத்து தவறாக சானிடைசரை குடித்துள்ளார்.