உகாண்டாவில் சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை ஏற்றி சென்ற லாரி கார் மற்றும் 3 வாகனங்கள் மீது மோதியதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேற்கு உகாண்டாவில் kasese பகுதியில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த விபத்து குறித்து செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் Irene Nakasiita கூறியதாவது, ” லாரி ஒன்று சவப்பெட்டியுடன் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களை அதிக சுமையுடன் ஏற்றி வந்தது. அப்போது திடீரென்று அந்த லாரி சாலையில் சென்ற கார் மற்றும் 3 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
விபத்து நடைபெற்ற இடத்தில் சாலை மிக சிறியதாக உள்ளது. மேலும் அதில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து சிறிது நேரத்திற்குள் kasese -லிருந்து வந்த இரண்டு லாரிகள் ஏற்கனவே விபத்துக்குள்ளாகி நின்றிருந்த வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்க செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் மீட்பு படையினருடன் இணைந்து பணியாற்றினர். இதுவரை அவர்கள் விபத்திலிருந்து காயத்துடன் உயிர்பிழைத்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்” என்று Irene Nakasiita கூறியுள்ளார்.
@KanronieRonald shares updates from the #Kasese accident scene. Road is now clear for other road users. Thanks for efforts of the @UPDF @PoliceUg and other support systems secured to give us a hand while saving the lives of those we managed to evacuate by 2:00am @inakasiita1 pic.twitter.com/f2vBE9m8dG
— Uganda Red Cross Society (@UgandaRedCross) February 3, 2021