Categories
தேனி மாவட்ட செய்திகள்

மக்களே அலெர்ட்! இளம்பெண்களிடம் கொஞ்சம் உஷாராக இருங்க…!!

இளம்பெண் ஒருவர் முதியவருக்கு உதவுவது போல நடித்து பணத்தை ஆட்டைய போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக ஏடிஎம் மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏடிஎம்களில் பணம் எடுக்கத் தெரியாதவர்களிடம்  சிலர் பணம் எடுத்துக் கொடுப்பது போல ஆசை வார்த்தைகளைக் கூறி மோசடி செய்கின்றனர். இது போன்று தேனியில் முதியவருக்கு உதவுவது போல நடித்து பட்டதாரி பெண் 49,500 பணத்தை திருடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. முதியவர் ஒருவர் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாமல் இருந்ததை கவனித்த மணிமேகலை என்ற பெண் அவருக்கு தான் உதவுவதாக கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்த முதியவரும் அந்தப் பெண்ணிடம் ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் அவருக்கு உதவுவது போல நடித்து ரூபாய் 49500 ஆட்டையை போட்டுள்ளார். இதையடுத்து பணம் பறிகொடுத்ததை அறிந்த முதியவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்டாப்பாக வந்த பட்டதாரி இளம்பெண் முதியவருக்கு உதவுவது போல நடித்து பணம் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |