இளம்பெண் ஒருவர் காசு கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாக பிரியாணி கொடுத்து வருவது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
மனிதர்களில் சிலர் மனிதாபிமானம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஏழைகளின் பசியை போக்குவதற்கும் அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இங்கே ஒரு பெண் இருக்கிறார். கோவையில் பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு இளம்பெண் ஒருவர் இலவசமாக பிரியாணி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலையோர உணவகம் அமைத்து நடத்தி வரும் சப்ரினா என்ற இளம்பெண் ஒரு பிளேட் பிரியாணி ரூபாய் 20 விற்பனை செய்கிறார். அந்த 20 ரூபாய் கூட கொடுக்க இயலாதவர்களுக்கு இலவசமாகவே பிரியாணி வழங்கி அவர்களின் பசியை போக்கி வருகிறார். இளம்பெண்ணின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.