மும்பையில் நடந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையர் தண்ணீருக்கு பதில் சானிடைசர் பருகிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்று 2021-2022 ஆம் வருடத்திற்கான மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பட்ஜெட்டின் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த பட்ஜெட் தாக்குதலில் இணை ஆணையரான ரமேஷ் பவரும் பங்கேற்றுள்ளார். அங்கு சானிடைசர் மற்றும் தண்ணீர் இரண்டும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது.
#WATCH: BMC Joint Municipal Commissioner Ramesh Pawar accidentally drinks from a bottle of hand sanitiser, instead of a bottle of water, during the presentation of Budget in Mumbai. pic.twitter.com/MuUfpu8wGT
— ANI (@ANI) February 3, 2021
அப்போது இணை ஆணையரான ரமேஷ் பவர் தண்ணீர் என்று நினைத்து சானிடைசரை குடித்துவிட்டார். இவர் சானிடைசரை பருகும் இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வெளியானதால் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.